குஜராத்தில் 3 மாதங்களுக்கு மேலாக டிஜிட்டல் மோசடியின் பேரில் பெண் மருத்துவரிடம் ரூ.19 கோடி பறிமுதல் செய்த கும்பல்

குஜராத்தில் 3 மாதங்களுக்கு மேலாக டிஜிட்டல் மோசடியின் பேரில் பெண் மருத்துவரிடம் ரூ.19 கோடி பறிமுதல் செய்த கும்பல்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மூத்த பெண் மருத்துவர் போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:

கடந்த மார்ச் 15 முதல் ஜூன் 25 வரை, என்னுடைய மொபைலில் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்ட ஒரு பெண், தன்னுடைய பெயர் ஜோதி விஸ்வநாத் எனவும், தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றுவதாகவும் கூறினாள். அதன் பின், காவல் துணை ஆய்வாளர் என மோகன் சிங் என்ற நபரும், அரசு வழக்கறிஞர்கள் என தங்களை அறிமுகப்படுத்திய மேலும் மூவர் என மொத்தம் நான்கு பேர் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டனர்.

அவர்கள் அனைவரும், என்னுடைய மொபைலில் இருந்து ஆட்சேபனையான தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறினர். எனது ஆதார் எண்ணை கேட்டார்கள். பின்னர், எனது வங்கிக் கணக்கு மோசடிக்காக பயன்படுத்தப்பட்டதாகவும், அந்நிய செலாவணி நிர்வாகச் சட்டம் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, அதற்கான ஆவணங்களையும் அனுப்பினார்கள்.

இந்த வழக்கில் இருந்து விடுபட ரூ.20 கோடி செலுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, என் வங்கியில் உள்ள சேமிப்பை திரும்பப் பெற்றும், நகைகள் மற்றும் பங்குகளை விற்றும், அவர்கள் கூறிய சுமார் 30 வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.19 கோடியை பரிமாற்றம் செய்தேன். அதன் பின்னரே நான் ஒரு சதியில் சிக்கினேன் என்பதை உணர்ந்தேன். எனவே தற்போது இந்த புகாரை அளிக்கிறேன் என்றார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஒருவர் மீது கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Comments Box