ஜூலை மாதத்தில் ரூ.1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் – மத்திய அரசின் அறிவிப்பு
கடந்த ஜூலை மாதத்தில் மட்டுமே, மொத்தமாக ரூ.1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இது வரை ஜிஎஸ்டி வருவாயில் மிக உயர்ந்த அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த தகவலை வெளியிட்டுள்ள மத்திய நிதியமைச்சகம் கூறியதாவது:
2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.1,95,735 கோடி வரி வசூலாகியுள்ளது. இது கடந்த சில மாதங்களை ஒட்டுமொத்தமாக கணிக்கும்போது, 7-வது முறையாக தொடர்ந்து ஜிஎஸ்டி வசூல் ரூ.1.80 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை இருந்த வருமானத்தை ஒப்பிடும் போது, இம்மாண்டு அதே காலத்தில் ஜிஎஸ்டி வசூல் 10.7% அதிகரித்துள்ளது.
அதேபோல், 2025-இல் ஜூன் மாத ஜிஎஸ்டி வருமானம் 6.2% அதிகரித்து, ரூ.1.84 லட்சம் கோடியை எட்டியது.
இந்த வசூல்தரம், நாட்டின் பொருளாதார செயற்பாடு நன்கு செயல்பட்டு வருவதையும், வரி அடிப்படையில் நிலைத்த வளர்ச்சியும் சுட்டிக்காட்டுகிறது.