இந்திய நீதி அறிக்கை 2025: முதல் 5 இடங்களை தென் மாநிலங்கள் கைப்பற்றின! தமிழ்நாடு 5-ம் இடம்
இந்திய நீதி அறிக்கை 2025 வெளியிடப்பட்ட நிலையில், காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை மற்றும் சட்ட உதவி உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்ட 18 பெரிய மாநிலங்களில், தமிழ்நாடு 5-ம் இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், முதல் ஐந்து இடங்களையும் தென் இந்திய மாநிலங்களே பிடித்துள்ளன.
இந்த அறிக்கையில், மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட புள்ளிகள் மூலமாக தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் 6 இடங்களில் உள்ள மாநிலங்கள் “சிறந்தவை” என்றும், அடுத்த 6 இடங்கள் “சராசரி” என்றும், கடைசி 6 இடங்கள் “மோசமானவை” என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பெரிய மாநிலங்கள் தரவரிசை:
- கர்நாடகா – 6.78 புள்ளிகள்
- ஆந்திரப் பிரதேசம் – 6.32 புள்ளிகள்
- தெலங்கானா – 6.15 புள்ளிகள்
- கேரளா – 6.09 புள்ளிகள்
- தமிழ்நாடு – 5.62 புள்ளிகள்
- சத்தீஸ்கர் – 5.54 புள்ளிகள்
- மத்தியப் பிரதேசம் – 5.42 புள்ளிகள்
- ஒடிசா – 5.41 புள்ளிகள்
- பஞ்சாப் – 5.33 புள்ளிகள்
- மகாராஷ்டிரா – 5.12 புள்ளிகள்
- குஜராத் – 5.07 புள்ளிகள்
- ஹரியானா – 5.02 புள்ளிகள்
- பிஹார் – 4.88 புள்ளிகள்
- ராஜஸ்தான் – 4.83 புள்ளிகள்
- ஜார்க்கண்ட் – 4.78 புள்ளிகள்
- உத்தராகண்ட் – 4.41 புள்ளிகள்
- உத்தரப்பிரதேசம் – 3.92 புள்ளிகள்
- மேற்கு வங்காளம் – 3.63 புள்ளிகள்
சிறிய மாநிலங்கள் தரவரிசை:
- சிக்கிம்
- இமாச்சலப் பிரதேசம்
- அருணாச்சலப் பிரதேசம்
- திரிபுரா
- மேகாலயா
- மிசோரம்
- கோவா
Facebook Comments Box