தேர்தல் ஆணையம் – 334 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் நீக்கம்
2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக, தேர்தலில் போட்டியிட வேண்டிய அடிப்படை நிபந்தனையை கூட பூர்த்தி செய்யாத, பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத 334 அரசியல் கட்சிகள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், இக்கட்சிகளுக்கான அலுவலகங்கள் எங்கும் காணப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட இக்கட்சிகள், பல்வேறு மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் சார்ந்தவை எனவும் கூறப்பட்டுள்ளது.
மொத்தம் 2,854 பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகள் இருந்த நிலையில், இப்போது 334 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதால், எண்ணிக்கை 2,520 ஆக குறைந்துள்ளது.
தற்போது, நாட்டில் 6 தேசிய கட்சிகளும், 67 மாநில அளவிலான அங்கீகாரம் பெற்ற கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.