உத்தரகண்ட் பெருவெள்ளத்தில் காணாமல் போன கணவரை தேடி அலைக்கும் மனைவி

உத்தரகண்டில் கடந்த 5 ஆகஸ்ட் அன்று கங்கோத்ரி கோயிலுக்கு அருகே மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தரளி என்ற கிராமம் முழுமையாக அழிந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டாலும், சுமார் 150 பேர் மண்ணில் புதைந்திருக்க வாய்ப்பு உள்ளது.

தரளி கிராமத்தை சேர்ந்த 32 வயது சுபம் நெகி, அங்குள்ள ஓட்டல் அதிபராக இருந்தவர். அவரது ஓட்டல் பெருவெள்ளத்தில் சேதமடைந்து, அவர் காணாமல் போயுள்ளார். அவரது மனைவி 28 வயது கோமல் கடந்த சில நாட்களாக கணவரை தேடி அலைக்கிறார்.

கோமல் கூறியதாவது: “நான் பெருவெள்ளம் நேர்ந்த போது தரளியில் இல்லை; உத்தரகாசியில் இருந்தேன். வெள்ளம் பற்றிய தகவல் கிடைத்ததும், உடனே தரளிக்கு வந்து கணவரை தேடுகிறேன். அவர் உயிரோடு இருக்கிறார் என நம்புகிறேன். கடந்த ஆண்டு மட்டுமே திருமணம் ஆனது. எப்படியாவது அவரை கண்டுபிடிப்பேன்.”

மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ கேப்டன் குர்பிரீத் சிங் கூறியதாவது: “தரளியில் 300 ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் உள்ளனர். 80 ஏக்கர் பரப்பளவில் 20 முதல் 50 அடி உயர சகதிகள் உள்ளன. சுற்றுவட்டார சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன. கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் பிரதான சாலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைப்புக்கு 4 நாட்கள் ஆகலாம். அதன்பிறகு நவீன இயந்திரங்களுடன் சகதியை அகற்றி சடலங்களை மீட்க முடியும்.”

Facebook Comments Box