செஸ் வரி மூலம் சேகரிக்கப்பட்ட ரூ.3.69 லட்சம் கோடியை தேவையான திட்டங்களுக்கு பயன்படுத்தாமை குறித்து மத்திய அரசு மீது சிஏஜி குற்றச்சாட்டு

2023-24 நிதி ஆண்டிற்கான நிலவரப்படி, செஸ் வரியினால் மத்திய அரசு வசூலித்த ரூ.3.69 லட்சம் கோடி தொகையை சரியான திட்டங்களுக்கு செலவிடவில்லை என்று மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை வெளியிட்டுள்ளது.

2023-24 நிதி ஆண்டுக்கான சிஏஜி அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வழக்கமான வரிகளுக்கு மேலாக ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் செஸ் வரியாக வசூலிக்கப்படுகிறது. இந்த கூடுதல் வரி கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, எண்ணெய் துறை மேம்பாடு போன்ற பல காரணிகளுக்காக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 1974-ல் அமல் செய்யப்பட்டது இந்த செஸ் வரி பல திட்டங்களுக்கு முறையாக ஒதுக்கப்படவில்லை என சிஏஜி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதற்குக் கடந்த அனைத்து மத்திய அரசுகளுக்கும் பொறுப்பே உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2023-24 நிதி ஆண்டுக்கான அறிக்கையின் படி, முதலீட்டாளர் கல்வி, பாதுகாப்பு, எண்ணெய் துறை மேம்பாடு, சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக வசூலிக்கப்பட்ட செஸ் தொகைகள் உரிய முறையில் ஒதுக்கப்படவில்லை. 2024 மார்ச் 31-வரை வசூலிக்கப்பட்ட ரூ.3,69,307 கோடி செஸ் வரி அந்தத் திட்டங்களுக்கு வழங்கப்படவில்லை என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

எண்ணெய் தொழில் மேம்பாட்டுக்காக 1974-ல் உருவாக்கப்பட்ட எண்ணெய் தொழில் (வளர்ச்சி) சட்டத்தின் படி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மீது செஸ் விதிக்கப்பட்டுள்ளது. 2023-24 OIDB அறிக்கையின் படி, 1974-75 முதல் 2023-24 வரை கச்சா எண்ணெய் மீதான செஸ் வரி ரூ.2,94,850 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், 1974-75 முதல் 1991-92 வரை OIDB-க்கு ரூ.902.40 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் பின், ஒவ்வொரு ஆண்டும் வசூலிக்கப்பட்ட செஸ் தொகையில் இருந்து OIDB-க்கு நிதி ஒதுக்கப்படவில்லை. அதாவது, எண்ணெய் துறையின் மேம்பாட்டுக்காக அரசால் வசூலிக்கப்பட்ட ரூ.2.9 லட்சம் கோடியில் ரூ.902 கோடி மட்டுமே OIDB-க்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இது வசூலிக்கப்பட்ட தொகையில் 0.3% மட்டுமே ஆகும்.

அதேபோல், கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக வசூலிக்கப்பட்ட செஸ் தொகைகளும் தேவையான முறையில் ஒதுக்கப்படவில்லை. 2004 முதல் மத்திய அரசு வசூலிக்கும் அனைத்து வரிகளிலும் கல்விக்கான 2% செஸ் வசூலிக்கப்பட்டது. மேலும், 2007 முதல் இடைநிலை மற்றும் உயர் கல்விக்காக வருமான வரி மற்றும் கூடுதல் கட்டணத்தில் கூடுதலாக 1% செஸ் வசூலிக்கப்பட்டது. பின்னர், 2018 முதல் இந்த இரண்டு செஸ் வரிகள் ஒன்றாகி 4% கல்வி வரியாக மாற்றப்பட்டன.

2018-19 முதல் 2023-24 வரை செஸ் வரியாக வசூலிக்கப்பட்ட ரூ.37,537 கோடியை மத்திய அரசு கல்வி மற்றும் சுகாதார முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்தவில்லை என்பது அறியப்பட உள்ளது.

Facebook Comments Box