“ரேவந்த் மூலம் சந்திரபாபு நாயுடுவுடன் தொடர்பில் இருக்கிறார் ராகுல்” – ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு

ஆந்திராவில் நடந்த வாக்குப்பதிவு முரண்பாடுகள் குறித்து ராகுல் காந்தி பேசவில்லை எனக் குற்றம்சாட்டி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, “ராகுல் காந்தி தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மூலமாக ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நேரடியாக தொடர்பில் இருக்கிறார். இதனால் ஆந்திரா தொடர்பான வாக்குப்பதிவு முரண்பாடுகளைப் பற்றி அவர் பேசவில்லை” என தெரிவித்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி, “ராகுல் காந்தி வாக்கு திருட்டைப் பற்றி பேசுகிறார். ஆனால், வாக்குப் பதிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் ஆந்திராவில் வாக்குகள் எண்ணப்பட்டதும் ஏற்பட்ட 12.50 சதவீத வாக்கு வித்தியாசத்தைப் பற்றி ஏன் அவர் கருத்து தெரிவிக்கவில்லை?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாக்கு திருட்டு மற்றும் பிஹார் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box