சர்வதேச யோகா தினத்தையொட்டி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
டெல்லி யமுனா விளையாட்டு மைதானத்தில் பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜேபி நட்டா யோகா பயிற்சி செய்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் யோகா சென்றுள்ளதாகவும், பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் யோகாவை பின்பற்றி பயன் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அகமதாபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா யோகா பயிற்சியில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், யோகா என்பது மனித குலத்திற்கு இந்தியா அளித்த கொடை என்றும், யோகாவை உலகமும், உலகமும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறினார். இன்று ஒரு கோடிக்கும் அதிகமானோர் யோகாசனம் செய்கின்றனர் என்றும், யோகாவை உலகிற்கு கொண்டு சென்றதில் பிரதமர் மோடி முக்கிய பங்கு வகித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
அசாமில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் யோகா பயிற்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் சர்பானந்த் சோனோவால், பிரதமர் மோடியின் தலைமையில் உலக மக்கள் யோகாவை ஏற்றுக்கொண்டுள்ளனர், இது இந்தியாவின் சாதனை என்று கூறினார்.
புவனேஸ்வர் கலிங்க மைதானத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் ஒடிசா முதல்வர் மோகன் சரண் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். இதேபோல் தேஜ்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா யோகா பயிற்சி செய்தார்.
Discussion about this post