தீபாவளி, சத் பண்டிகைக்காக 12,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் – ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

தீபாவளி மற்றும் சத் பண்டிகையையொட்டி 12,000-க்கும் அதிகமான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

டெல்லி ரயில் பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“இந்திய ரயில்வே, பண்டிகை காலங்களில் பயணிகள் நெரிசலைக் குறைத்து அவர்களுக்கு சிரமமின்றி பயணம் செய்யும் வசதியை வழங்கும் வகையில் 12,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. மேலும், அக்டோபர் 13 முதல் 26-ஆம் தேதி வரை பயணிப்பவர்களுக்கும், நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரை திரும்பிப் பயணிப்பவர்களுக்கும் டிக்கெட் கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்” என்றார்.

பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி, எம்.பி. சஞ்சய் ஜெய்ஸ்வால், மத்திய அமைச்சர் லாலன் சிங், எம்.பி. சஞ்சய் குமார் ஜா ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்ட பின், அஸ்வினி வைஷ்ணவ் பிஹாருக்கான சிறப்பு ரயில் திட்டங்களை அறிவித்தார்.

அதன்படி:

  • கயா – டெல்லி,
  • சஹர்சா – அமிர்தசரஸ்,
  • சாப்ரா – டெல்லி,
  • முசாபர்பூர் – ஹைதராபாத்,

என 4 புதிய அம்ரித் பாரத் ரயில்கள் அறிமுகமாக உள்ளன.

மேலும், புத்தர் தொடர்பான முக்கிய தலங்களை இணைக்கும் ஒரு சுற்றுப்பயண ரயிலும் இயக்கப்பட உள்ளது. நடுத்தர வர்க்க மக்களின் பயண வசதியை கருத்தில் கொண்டு இத்திட்டம் வகுக்கப்பட்டதாகவும், அந்த சுற்று ரயில் வைஷாலி, ஹாஜிபூர், சோனேபூர், பாட்னா, ராஜ்கிர், கயா, கோடெர்மா உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Facebook Comments Box