ஆன்லைன் விளையாட்டால் வருடத்திற்கு ரூ.20,000 கோடி இழப்பு: 45 கோடி மக்கள் பாதிப்பு – அரசு தகவல்
பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகள் சமூகத்தில் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளன. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், மக்களின் நலனுக்கே முன்னுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசின் மதிப்பீட்டின்படி, ஆண்டுதோறும் சுமார் 45 கோடி மக்கள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மூலம் ரூ.20,000 கோடி வரை இழக்கின்றனர். இதனால் சேமிப்பை இழந்து கடனில் சிக்கி தற்கொலைக்கும் துணியும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில் ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா சட்டமாகிய பின், விதிகளை மீறுவோர் மீது 3 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.