உருவாக்கத்தில் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்த, 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவின் ஐதராபாத் நகரில் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் உரையாற்றினார்.

அப்போது அவர், “முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வடிவமைத்த முதல் ராக்கெட் 17 டன் எடை கொண்டது. அது 35 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை தாழ்வான பூமி சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் பெற்றது. தற்போது, 75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை தாழ்வான பூமி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் வல்லமை கொண்ட புதிய ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கி வருகிறது” என்று கூறினார்.

Facebook Comments Box