ரஷ்ய கச்சா எண்ணெயால் இந்தியா லாபம்: அமெரிக்கா மீண்டும் கண்டனம்
ரஷ்யாவிடமிருந்து பெறப்படும் கச்சா எண்ணெயை சுத்திகரித்து மறுவிற்பனை செய்வதன் மூலம் இந்தியா லாபம் ஈட்டுகிறது என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் குற்றம்சாட்டியுள்ளார்.

பெசென்டின் குற்றச்சாட்டு:

சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர்,

“மாஸ்கோவிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி, அதை சுத்திகரித்த தயாரிப்புகளாக உலக சந்தையில் விற்பனை செய்வது இந்தியாவின் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை. இதன்மூலம் அவர்கள் பெரும் லாபம் ஈட்டுகின்றனர்” என்று கூறினார்.

முந்தைய எச்சரிக்கை:

இந்தியாவை விமர்சிப்பது பெசென்டுக்கு இது முதல் முறை அல்ல. கடந்த வாரம் வழங்கிய பேட்டியில்,

“அலாஸ்காவில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை என்றால், இந்தியா மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம்” என அவர் எச்சரித்திருந்தார்.

தொடர்ச்சியான விமர்சனங்கள்:

கடந்த 10 நாட்களாக ரஷ்யாவுடனான எரிசக்தி வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கை குறிவைத்து, பெசென்ட் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

ஏற்கனவே, இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். குறிப்பாக ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளை குறிவைத்து, கூடுதல் அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் பெசென்ட் எச்சரித்துள்ளார்.

Facebook Comments Box