ரூ.2,000 கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்பட்டது தொடர்பான வழக்கின் பேரில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன இயக்குநர் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர்.

பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பெருமளவில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் 13ஆம் தேதி மோசடி நிறுவனம் என வங்கியால் அறிவிக்கப்பட்டது. இதற்கான எழுத்துப்பூர்வ தகவலை ஜூன் 24ஆம் தேதி ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியதோடு, சிபிஐக்கு புகார் அளிக்கும் நடவடிக்கையும் தொடங்கியது.

இந்த விவகாரம் குறித்து மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கடந்த மாதம் மக்களவையில் பதிலளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் இயக்குநர் அனில் அம்பானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது அவர்களுடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box