மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மருத்துவர் மற்றும் அவரது மகளுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புனேவின் எரண்ட்வானே பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும் அவரது மகளும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். ரத்த மாதிரி பரிசோதனையில் அவர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 5 குடும்ப உறுப்பினர்களின் சளி மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு புனேவில் முதன்முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box