🔴 சத்தீஸ்கர் பிஜப்பூரில் 9 பெண்கள் உட்பட 30 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர்.

🔴 இவர்களில் 20 பேருக்கு மொத்தம் ரூ.81 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.

🔴 மாநில மறுவாழ்வு திட்டத்தின் கீழ் தலா ரூ.50 ஆயிரம்

சத்தீஸ்கர் பிஜப்பூர் மாவட்டத்தில் 9 பெண்கள் உட்பட 30 மாவோயிஸ்டுகள் நேற்று காவல்துறையிடம் சரணடைந்தனர். அவர்களில் 20 பேருக்கு மொத்தம் ரூ.81 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது என காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர யாதவ் தெரிவித்தார்.

சரணடைந்த அனைவருக்கும் மாநில அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் தலா ரூ.50 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான ஒரே நேர சரணடைவாகும் என்று துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்தார்.

Facebook Comments Box