ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, அமரావதியை இணைக்கும் புல்லட் ரயில்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஹைதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூருவை இணைக்கும் புல்லட் ரயில் விரைவில் தொடங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற இந்திய உணவு உற்பத்தி உச்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், “தென்னிந்தியாவில் விரைவில் புல்லட் ரயில் சேவை தொடங்கப் போகிறது. இதற்காக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஹைதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு நகரங்களை இது இணைக்கும். ஐந்து கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த பகுதி, உலகின் மிகப்பெரிய இணைப்பாகவும், மிகப்பெரிய சந்தையாகவும் மாறும். இது செயல்பட்டால் அதன் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும்” என்றார்.

அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது: “2025 ஆம் ஆண்டுக்கான இந்திய உணவு உற்பத்தி உச்சி மாநாட்டில் உரையாற்றினேன். தொழில் வளர்ச்சிக்கு ஆதரவான கொள்கைகள், செழிப்பான தொழில் குழுக்கள் மற்றும் வலுவான உள்கட்டமைப்பின் மூலம் ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் உணவு பதப்படுத்தும் புரட்சியை ஊக்குவிக்க பெருமை கொள்கிறது. ரூ.9,000 கோடிக்கும் மேற்பட்ட புதிய முதலீடுகள் மற்றும் தேசிய உற்பத்தியில் 9% பங்களிப்புடன், நமது மாநிலத்தை இந்தியாவின் உணவு பதப்படுத்தும் மையமாக மாற்றியுள்ளோம். உலகளாவிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஆந்திரத்துடன் சேர்ந்து வளர அழைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box