அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவைகள் நிறுத்தம் – அஞ்சல் துறை அறிவிப்பு

அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவுக்கு அஞ்சல் அனுப்புவதில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவுவதால், தேவையான ஒழுங்குமுறை நடைமுறைகள் பின்பற்ற முடியாத சூழ்நிலையில், அமெரிக்காவுக்குப் போகும் கடிதங்கள், ஆவணங்கள், 100 அமெரிக்க டாலர் மதிப்புக்குள் உள்ள பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அஞ்சல் சேவைகளும் இடைநிறுத்தப்படுகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலைமையை அஞ்சல் துறை நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், சேவைகளை விரைவில் மீண்டும் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொருட்களை பதிவு செய்து அனுப்ப முடியாத வாடிக்கையாளர்கள் தபால் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம். ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு அஞ்சல் துறை வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.

Facebook Comments Box