“வாக்காளர் அதிகாரப் பயணத்திற்கு அபாரமான ஆதரவு!” – தேஜஸ்வி யாதவ் விளக்கம்

இந்திய தேர்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டினார்.

வாக்காளர் அதிகார யாத்திரையின் நிறைவுநாளை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“இந்த யாத்திரைக்கு கிடைத்த மக்கள் ஆதரவு மிகுந்தது. பிஹாரிலிருந்து மக்கள், தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றுவார்கள்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது மக்களிடம் நம்பிக்கை குறைந்துவிட்டது. பாஜகவின் உண்மையான முகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் விரைவில் அவர்களை அதிகாரத்திலிருந்து நீக்கிவிடுவார்கள். பிஹாரிலிருந்து தேசத்துக்கே வலுவான செய்தி அனுப்பப்படும். அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதிக்க நினைப்பவர்களுக்கு உரிய பதில் வழங்கப்படும். இந்த யாத்திரையில் எங்களுக்கு கிடைத்த ஆதரவு மிகவும் பெரிது” என்று அவர் தெரிவித்தார்.

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டை எதிர்த்து, ராகுல் காந்தி முன்னிலை வகித்த 16 நாள் நீடித்த இந்த யாத்திரை இன்று பாட்னாவில் நிறைவடைந்தது. கடந்த ஆகஸ்ட் 18 அன்று சசாரத்தில் ராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவும் இணைந்து இந்த பயணத்தை தொடங்கியிருந்தனர்.

Facebook Comments Box