ஜிஎஸ்டி வரி குறைப்பு – செப்டம்பர் 22 முதல் நடைமுறை: எதற்கென்ன விகிதம்?

ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வரி குறைப்பு செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி குறைக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதன்படி பிரதமரின் தலைமையில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் பின் பல மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார்.

புதுடெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 2 நிலைகளில் ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

  • 12% மற்றும் 28% ஜிஎஸ்டி விகிதங்கள் ரத்து செய்யப்பட்டு, இனி 5% மற்றும் 18% என்ற இரண்டு மட்டுமே ஜிஎஸ்டி அடுக்குகள் இருக்கும்.
  • ஆடம்பரப் பொருட்களுக்கு சிறப்பு ஜிஎஸ்டி வரியாக 40% விதிக்கப்படும்.

முக்கிய அம்சங்கள்:

  • விலக்கு : தனிநபர் ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு, உயிரைக் காக்கும் மருந்துகள், கல்வி சார்ந்த எழுதுபொருட்கள் (பென்சில், கிரேயான்ஸ், நோட்டுப் புத்தகம், எரேசர், வரைபடங்கள், சார்ட் முதலியன) – ஜிஎஸ்டி விலக்கு.
  • ஆட்டோமொபைல் : கார்கள் மீது ஜிஎஸ்டி 28% இலிருந்து 18% ஆக குறைக்கப்பட்டது.
  • சொகுசு வாகனங்கள் : 350 சிசி மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், லக்ஷுரி கார்கள் – 40% ஜிஎஸ்டி.
  • தினசரி பொருட்கள் : ஹேர் ஆயில், ஷாம்பு, டூத் பேஸ்ட், சோப்பு, ஷேவிங் கிரீம் – 5% ஜிஎஸ்டி.
  • ஆடம்பர மின் சாதனங்கள் : ஏசி, டிவி, கார் – 18% ஜிஎஸ்டி.
  • விவசாய உபகரணங்கள் : 5% ஜிஎஸ்டி.
  • புகையிலை/சிகரெட் : சிகரெட், பான் மசாலா, குட்கா போன்றவற்றுக்கு 40% சிறப்பு ஜிஎஸ்டி தொடரும்.

மேலும்

  • அமெரிக்கா விதித்த 50% வரிக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கும் தொடர்பில்லை; கடந்த 18 மாதங்களாகவே இதற்கான ஆலோசனை நடைபெற்றுவருகிறது என நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
  • வரி குறைப்பின் பலனை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
  • புதிய விகிதங்கள் செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும். ஆனால் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் இதில் சேராது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
Facebook Comments Box