அயோத்தி ராமர் கோயிலில் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே தம்பதியர் தரிசனம்
பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே, தனது மனைவி ஓம் தாஷி தோமாவுடன் இன்று அதிகாலை அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்தார்.
அயோத்தி விமான நிலையத்தில் மாநில அரசு சார்பில் உத்தரப் பிரதேச அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி அவர்களை வரவேற்றார். பின்னர், பிரதமர் தம்பதியினர் கோயிலுக்குச் சென்று வழிபாடும், கோயில் வளாக ஆய்வும் மேற்கொண்டனர்.
இந்தியாவிற்கு அவரது பயணத்தின் ஒரு பகுதியாக அமைந்த இந்த அயோத்தி தரிசனம், இந்தியா – பூட்டான் நாடுகளுக்கிடையிலான ஆன்மிக, கலாச்சார நெருக்கத்தை பிரதிபலிப்பதாகும்.
இதற்கு முன்னர், பீகாரின் நாலந்தா மற்றும் ராஜ்கிர் பகுதிகளிலும் ஷெரிங் டோப்கே தம்பதியினர் சென்றிருந்தனர். அப்போது நாளந்தா பல்கலைக்கழக யூடியூப் சேனலில் உரையாற்றிய அவர், “பண்டைய கல்வி மையமான நாளந்தா மீண்டும் உயிர்ப்பெடுத்து வருகிறது. அதன் பாரம்பரியத்தை பேணியும் பரப்பியும் வரும் இந்திய அரசுக்கு நன்றி. நாளந்தா உணர்வு தொடர்ந்து வளர பூட்டானும் பங்களிக்கிறது. அமைதி, ஒற்றுமை, ஆன்மிகத்தின் சின்னமாக நாளந்தா திகழ்கிறது” எனக் குறிப்பிட்டார்.