பள்ளி இடிந்து விழுந்ததால் மாணவர்களுக்கு வீட்டை வழங்கிய மனமுவந்த விவசாயி

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம் பிப்லோடி கிராமத்தில், கடந்த ஜூலை 25ஆம் தேதி பெய்த கனமழையால் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்ததுடன், 21 பேர் காயமடைந்தனர். இதனால், அங்கு கல்வி கற்றுவரும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் வகுப்பறையின்றி தவித்தனர்.

இந்நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான விவசாயத் தொழிலாளி மோர் சிங் தனது 2 படுக்கையறை கொண்ட கான்கிரீட் வீட்டை வகுப்பறைக்காக கல்வித்துறைக்கு ஒப்படைத்தார்.

இதற்காக, இரண்டு வயது பேரன் உட்பட தனது குடும்பத்தினர் 8 பேருடன் வீட்டை விட்டு வெளியேறி, தங்குவதற்கான ஏற்பாடுகளை உறவினர்களின் வீடுகளில் செய்து கொண்டார். மேலும், வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்களையும் உறவினர் இல்லங்களுக்கு மாற்றினார்.

Facebook Comments Box