ஹைதராபாத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடக்கம்
மும்பைக்கு அடுத்ததாக விநாயகர் சதுர்த்தி திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெறும் நகரமாக ஹைதராபாத் திகழ்கிறது. இங்கு ஆயிரக்கணக்கான இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை முதல் 7ஆம் தேதி காலை 10 மணி வரை, அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீரில் கரைக்கப்பட உள்ளது.
இதையொட்டி ஹைதராபாத் நகரம் முழுவதும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 10 ஆயிரம் போலீஸ் பணியாளர்கள் சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Facebook Comments Box