மசூதியில் தேசிய சின்னம் பொறித்த பலகை சேதம் – முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம்
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியின் வடபகுதியில் அமைந்துள்ளது ஹஸ்ரத்பால் மசூதி. இதை ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் வக்ஃப் வாரியம் பராமரித்து வருகிறது. சமீபத்தில் இந்த மசூதி புதுப்பிக்கப்பட்டு, அதில் தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட திறப்பு பலகை நிறுவப்பட்டது. அந்த பலகையை அடையாளம் தெரியாத சிலர் நேற்று முன்தினம் சேதப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்:
“மசூதியில் வைக்கப்பட்டிருந்த தேசிய சின்னம் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்க செயல். ஆனால் அதே சமயம், மத வழிபாட்டுத் தலத்தில் தேசிய சின்னம் பொறிக்க வேண்டிய அவசியம் என்னும் கேள்வியும் எழுகிறது.
நான் பார்த்த வரையில், வேறு எந்த மதத்தலங்களிலும் – கோவில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் ஆகியவற்றில் – இத்தகைய தேசிய சின்னம் பொறித்ததை காணவில்லை. இவை அனைத்தும் மத வழிபாட்டு மையங்கள்; அரசு நிறுவனங்கள் அல்ல” என்று அவர் குறிப்பிட்டார்.