2024 – 2025-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா 199 பில்லியன் டாலர்களை சம்பாதித்து இருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளன.
இந்தியா – அமெரிக்கா இடையே பொருட்கள், சேவைகள், தொழில்நுட்பம், முதலீடுகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்கள் பரிமாறப்படுகிறது. இதனால் இருநாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவு, முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஈட்டும் மொத்த வருவாய் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக அமெரிக்காவிடம் இருந்து இந்தியா 87 பில்லியன் டாலரையும், இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா 41 பில்லியன் டாலர்களையும் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சேவை பிரிவில் அமெரிக்கா, 41 புள்ளி 8 பில்லியன் டாலர்களையும், இந்தியா, 41 புள்ளி 6 பில்லியன் டாலர்களையும் சம்பாதிப்பதாக கூறப்பட்டுள்ளது.
நிறுவன வருவாய் பிரிவில், இந்தியாவுக்கு 40 பில்லியன் டாலர் வருவாயும், அமெரிக்காவுக்கு 81 பில்லியன் டாலர் வருவாயும் கிடைப்பதாக தரவுகள் கூறுகின்றன.
அதன்படி, 2024 – 2025-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா 199 பில்லியன் டாலர்களையும் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா 196 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், வருவாயாக ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 – 2025 ஆம் ஆண்டுக்கான நிலவரப்படி, இந்தியாவிடம் அமெரிக்காவுக்கு கிடைத்த வருவாய் | AthibAn Tv