ஜார்க்கண்டில் கடத்த முற்பட்ட 200 பசுக்கள் மீட்பு

உத்தரப் பிரதேசத்தில் இருந்து பெரிய கன்டெய்னர் லாரிகளில் பசுக்கள் ஜார்க்கண்ட் மாநில கர்வா மாவட்ட நவடா கிராமத்துக்கு கடத்தப்படுகின்றன என்ற புகாரை விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் கடந்த 4ஆம் தேதி காவல்நிலையத்தில் அளித்தனர்.

அதன்படி, நவடா கிராமத்தில் இருந்து பசுக்களை வேறு மாவட்டங்களுக்கு அனுப்பியிருந்ததை கண்டறிந்த விஎச்பி, பஜ்ரங் தளம் அமைப்பினர்கள் அங்கு விரைந்து சென்று பசுக்களை தடுத்து நிறுத்தினர்.

இந்த சம்பவத்தில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்; மேலும் ஒருவரோ தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சுமார் 200 பசுக்கள் காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டன.

பின்னர், இரண்டு நாட்களுக்கு பிறகு அவை பலமு நகரிலுள்ள மையத்துக்கு மாற்றப்பட்டன.

Facebook Comments Box