“ராகுல் காந்தி 2029-ல் பிரதமராக வருவார்” – டி.கே.சிவகுமார் நம்பிக்கை
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், 2029ஆம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர்,
“2029-ஆம் ஆண்டு ராகுல் காந்தி இந்த நாட்டின் அடுத்த பிரதமராக வருவார் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாடு ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்று நமக்கு சர்வதேச அளவில் நண்பர்கள் எவரும் இல்லை,” என்று கூறினார்.
கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்த கேள்விக்கு அவர்,
“உலகில் உள்ள அனைவரும் நம்பிக்கையில்தான் வாழ்கிறார்கள். நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கையே இல்லை. முதல்வர் பதவி முக்கியமல்ல; சுயநலம் எனக்கில்லை. கடின உழைப்பு எப்போதும் பலனளிக்கும். கட்சியின் உயர்மட்டத் தலைமையினரின் முடிவுகளுக்கு ஏற்பவே நாங்கள் செயல்படுகிறோம். எங்களின் குறிக்கோள் கர்நாடக மக்களுக்கு நல்லாட்சியே,” என்றார்.
மேலும்,
“நான் காங்கிரஸில் பிறந்தவன்; காங்கிரஸ்காரனாகவே இறப்பேன். பாஜகவுக்கு எந்த சித்தாந்தமும் இல்லை. காந்தி குடும்பத்துக்கு நான் எப்போதும் விசுவாசியாக இருப்பேன். காந்தி குடும்பம்தான் கட்சியையும், நாட்டையும் ஒன்றிணைத்து வைத்திருக்கிறது,” என்றும் டி.கே.சிவகுமார் வலியுறுத்தினார்.