நெருக்கடியின் போது பல்வேறு இன்னல்களை சந்தித்த முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அவர் உண்மையான நண்பர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாறு குறித்த 3 புத்தகங்களை வீடியோ மூலம் பிரதமர் மோடி வெளியிட்டார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது வெங்கையா நாயுடு 17 மாதங்கள் சிறையில் இருந்ததை நினைவு கூர்ந்தார்.
வாஜ்பாய் அரசில் இணைந்து பணியாற்றிய போது, சேவைக்கு தான் அதிகாரம் என்பதை வெங்கையா நாயுடு நிரூபித்துள்ளார் என்று பிரதமர் மோடி பாராட்டினார்.
ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்காக வெங்கையா நாயுடு பாடுபட்டார் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
Facebook Comments Box