காஷ்மீரில் நிலம் உள்வாங்கியதால் 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பாதிப்பு
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள மலையடிவார கிராமமான கலாபனில் நிலம் உள்வாங்கியதால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 50 கட்டிடங்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரிகள் தெரிவித்ததாவது: “சேதமடைந்த கட்டிடங்களில் பெரும்பாலானவை குடியிருப்புகள். அதேசமயம், 3 பள்ளிக் கட்டிடங்கள், ஒரு மசூதி, ஒரு கல்லறை மற்றும் அந்த கிராமத்தை இணைக்கும் முக்கிய சாலையும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலம் தொடர்ந்து உள்வாங்கி வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்” என கூறினர்.

நிலையைக் கண்காணிக்க, மாநில ஜல்சக்தி மற்றும் வனத்துறை அமைச்சர் ஜாவேத் அகமது ராணா நேற்று கலாபன் கிராமத்துக்குச் சென்று சேதமடைந்த இடங்களை பார்வையிட்டார்.

Facebook Comments Box