தெலங்கானாவில் கனமழை, மின்னல் தாக்கி 8 பேர் பலி

தெலங்கானாவில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பல இடங்களில் வெள்ளம் போல் நீர் தேங்கி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள், குறிப்பாக விஜயவாடா-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சில இடங்களில் முடங்கியது.

இந்த தொடர்ந்த கனமழையுடன் மின்னல் தாக்கியதில், மாநிலம் முழுவதும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கத்வால் மாவட்டம் பூம்பூர் கிராமத்தில், வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் பனை மரத்தின் கீழ் மழையிலிருந்து தஞ்சம் அடைந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் சர்வேஷ், பார்வதி, சவுபாக்கியா ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற நால்வர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

இதேபோல் நிர்மல் மாவட்டத்தில் வெங்கட், எல்லைய்யா, அவரது மனைவி எல்லம்மா ஆகிய மூவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மேலும், கம்மம் மாவட்டம் சத்யநாராயணபுரம் கிராமத்தில் விவசாயிகள் மகேஷ் மற்றும் வீரபத்ரய்யா இருவரும் மின்னல் தாக்குதலில் உயிரிழந்தனர்.

Facebook Comments Box