எல்லைப்பகுதிகளில் மக்கள்தொகை மாற்றும் சதியை தடுக்க விரைவில் நடவடிக்கை – பிரதமர் மோடி

அசாமின் டார்ராங் மாவட்டம் மங்கல்தோயில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

“நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஊடுருவல்காரர்களின் உதவியுடன் மக்கள்தொகையை மாற்ற முயலும் சதித்திட்டத்தை முறியடிக்க மத்திய அரசு விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது. ஊடுருவல்காரர்களிடமிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதே பாஜக அரசின் முக்கிய இலக்கு.

வங்கதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் மக்கள்தொகையை மாற்றும் முயற்சியில் ஈடுபடுவோரை மக்கள் கவனிக்க வேண்டும். இது தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு (பணி) மிகவும் அவசியம்.

ஊடுருவல்காரர்களுக்கு அடைக்கலம் அளித்து, அவர்களை காப்பாற்ற விரும்பும் அரசியல்வாதிகளுக்கு நான் நேரடியாகச் சொல்ல விரும்புகிறேன் – உங்கள் சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். காங்கிரஸ் கட்சி ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் பக்கம் நிற்கிறது. ஆனால் அவர்களை அகற்ற நாங்கள் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருக்கிறோம்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஊடுருவலை ஊக்குவித்தது. அவர்கள், ஊடுருவல்காரர்கள் நம் நாட்டில் நிலைத்திருக்க வேண்டும் என்றும், நம் எதிர்காலத்தையே தீர்மானிக்க வேண்டும் என்றும் விரும்பினர். விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் மதத்தலங்களின் நிலங்களை ஊடுருவல்காரர்கள் அபகரிக்க காங்கிரஸ் பங்களித்தது.

ஆனால் பாஜக அரசு அந்த நிலைமையை மாற்றுகிறது. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் தலைமையில், ஊடுருவல்காரர்களால் கைப்பற்றப்பட்ட இலட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஊடுருவல்காரர்களை ஆதரிப்பவர்கள் தண்டனை அனுபவிக்க நேரிடும்; நாடு அவர்களை ஒருபோதும் மன்னிக்காது” என பிரதமர் மோடி எச்சரித்தார்.

Facebook Comments Box