பாகிஸ்தான் வளர்த்த பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது: பிரதமர் மோடி குற்றஞ்சாட்டு
பாகிஸ்தானால் உருவாக்கப்படும் பயங்கரவாதிகளை தேசத்துக்கு விரோதமான சக்திகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சி ஊக்குவிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
அசாமின் டார்ரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
“நமது துணிச்சலான படைவீரர்களை ஆதரிப்பதற்குப் பதிலாக, ஊடுருவிச் செல்வோர்களையும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விடுப்போர்களையும் காங்கிரஸ் ஆதரிக்கிறது. பாகிஸ்தான் வளர்த்த பயங்கரவாதிகளை தேசவிரோத சக்திகளுடன் இணைந்து காங்கிரஸ் ஆதரிக்கிறது. மீண்டும் மீண்டும் காங்கிரஸ் கட்சி தேசவிரோத சக்திகளுக்கு தங்குமிடம் கொடுத்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு எனது முதல் அசாம் பயணம் இதுவாகும். காமாக்யா அம்மனின் அருளால், ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இன்று இந்த புனித நிலத்தில் இருப்பதால் நான் தெய்வீக இணைப்பை உணர்கிறேன்.
செங்கோட்டையில் சுதந்திர தின உரையில் நான் சக்ரதாரி மோகனை நினைவுகூர்ந்தேன். இன்று இந்த புனித தருணத்தில், நாட்டின் பாதுகாப்பிற்கான சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு திட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.
2035க்குள் இந்த சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தி வலுப்படுத்துவோம். இது பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து நம்மை காப்பதோடு, தக்க பதிலடியும் வழங்கும்” என்றார்.