ஆந்திராவில் பள்ளிச் சுவர் இடிந்து 5 வயது மாணவர் பலி – 10 பேர் காயம்

ஆந்திரப் பிரதேசம் கர்னூல் மாவட்டத்தில் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில் 5 வயது மாணவர் உயிரிழந்தார்; மேலும் 10 மாணவர்கள் காயமடைந்தனர்.

கர்னூல் காவடி தெருவில் உள்ள கீர்த்தி ஆங்கில வழி உயர்நிலைப் பள்ளியில் இன்று காலை தொழுகைக்காக சுவருக்கு அருகில் நின்றிருந்த மாணவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில் 5 வயது ரகீப் என்பவர் பலியானார். காயமடைந்த 10 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக ஆந்திர மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் நர லோகேஷ், “இந்தச் சம்பவம் குறித்து மிகுந்த வருத்தம். காயமடைந்த மாணவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனியார் பள்ளிகள் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்” என தெரிவித்தார். அவர், இறந்த மாணவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

கர்னூல் தொகுதி எம்எல்ஏ மற்றும் தொழில்–வணிக அமைச்சர் டி.ஜி. பரத், “சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

Facebook Comments Box