ஆயுதங்களை கடத்திய குற்றச்சாட்டில் 3 ராணுவ சுமைதூக்கிகள் கைது

ஜம்மு-காஷ்மீர் போலீஸார், ராணுவத்துக்குச் சொந்தமான ஆயுதங்களை கடத்தியதாக 3 சுமை தூக்கும் நபர்களை கைது செய்துள்ளனர்.

ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக, மாதாந்திர சம்பள அடிப்படையில் சுமை தூக்கும் நபர்களை தற்காலிகமாக பணியில் அமர்த்தி வருகின்றனர். இவர்கள் கடினமான மலைப்பாதைகள் மற்றும் பனிமலைப் பகுதிகளில் வீரர்களுக்குத் தேவையான பொருட்களை சுமந்து செல்வது இவர்களின் முக்கிய பணி.

ஆனால், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் மண்டி பகுதியில், ராணுவத்துக்குரிய ஆயுதங்களை கடத்திய குற்றச்சாட்டில் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 ஏகே-47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கு முன்பு, 2 வாரங்களுக்கு முன்னர், இதேபோல் 4 ஏகே-47 துப்பாக்கிகள் சுமை தூக்கும் நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இவ்வாறாக கைதானவர்கள் அஸாமாபாத்தைச் சேர்ந்த தாரிக் ஷேக், சேம்பர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அகமது மற்றும் முகமது ஷபி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜம்மு மண்டல போலீஸ் ஐஜி பீம்சென் துட்டி கூறுகையில்:

“ஆயுத கடத்தல் சம்பவத்தில் 3 பேரை கைது செய்துள்ளோம். இதுவரை மொத்தம் 7 ஏகே-47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்தக் கடத்தல் நடந்துள்ளது” என்றார்.

Facebook Comments Box