அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை சரியான திசையில் முன்னேறுகிறது – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் நேற்று நடைபெற்ற இந்தியா–யுஏஇ உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது, இந்தியா மற்றும் அமெரிக்கா நெருங்கிய நட்பு நாடுகள்; இரு நாடுகள் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் முன்னேறிவருகின்றன.
இரு நாடுகளுக்கும் பலன் தரும் வகையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் அவர் தெரிவித்தார். இதுவரை இந்தியா–அமெரிக்கா இடையே 5 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
ஆகஸ்ட் 25-ஆம் தேதி 6-ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. ஆனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்த காரணத்தால் அது தடைபட்டது. பின்னர் அமெரிக்க வர்த்தக குழு டெல்லிக்கு வந்தது, கருத்து வேறுபாடுகள் குறைக்கப்பட்டு பேச்சுவார்த்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இதன் மூலம் விரைவில் 6-ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று, இருதரப்புக்கும் உட்பட்ட வர்த்தக ஒப்பந்தம் இறுதிப் படியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.