மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: திக் விஜய சிங் சந்தேகம் – தேர்தல் ஆணையத்தின் பதில்

காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) ஹேக் செய்யப்படுவதால், நாட்டின் தேர்தல்களை ஹேக்கர்களிடம் ஒப்படைக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். சமூக வலைதள பதிவில், “வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி தேர்தலை நடத்துவோமா? இல்லையெனில் VVPAT சீட்டுகளை நமது கைகளில் கொடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதி உள்ளிட்ட சில இடங்களில் வாக்காளர்களை ஆன்லைனில் நீக்கும் மோசடி நடந்ததாகவும், அது திட்டமிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுச்செய்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்து, “ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை. வாக்காளர் பட்டியலில் இருந்து யாரையும் ஆன்லைனில் நீக்க முடியாது, பாதிக்கப்பட்ட நபரின் கருத்தை கேட்காமலேயே பெயரை நீக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார். 2023-ல் கர்நாடகா ஆலந்த் தொகுதியில் சில முயற்சிகள் நடந்திருந்தாலும் அவை தோல்வியடைந்துவிட்டதாகவும், அவற்றுக்கு விசாரணை எஃப்ஐஆர் மூலம் நடைபெற்றதாகவும் ஆணையம் கூறியுள்ளது.

Facebook Comments Box