மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு – துணை ராணுவ வீரர்கள் 2 பேர் பலி
மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் துணை ராணுவப்படையான அசாம் ரைஃபிள்ஸ் வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது வெள்ளிக்கிழமை மாலை (5.50 மணி அளவில்) அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் இரு அசாம் ரைஃபிள்ஸ் வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை “கொடூரத் தாக்குதல்” என்று மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “இத்தகைய தாக்குதல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது; குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூரில் அமைதி நிலை திரும்ப அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.