16 மாநிலங்கள் வருவாய் உபரி நிலை: உ.பி. முதலிடம் – சிஏஜி அறிக்கை

மாநில அரசுகளின் நிதி நிலை குறித்த ஆய்வு அறிக்கையை மத்திய கணக்கு தணிக்கையாளர் (CAG) அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் 16 மாநிலங்கள் வருவாய் உபரியில் உள்ளன. இதற்கு முன்பு பற்றாக்குறை மாநிலங்களின் பட்டியலில் இருந்த உத்தர பிரதேசம், தற்போது உபரி வருவாய் மாநிலங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் உத்தர பிரதேசத்தின் உபரி வருவாய் ரூ.37 ஆயிரம் கோடி என பதிவாகியுள்ளது.

இந்த வரிசையில் குஜராத் (ரூ.19,865 கோடி), ஒடிசா (ரூ.19,456 கோடி), ஜார்க்கண்ட் (ரூ.13,564 கோடி), கர்நாடகா (ரூ.13,496 கோடி), சத்தீஸ்கர் (ரூ.8,592 கோடி), தெலங்கானா (ரூ.5,944 கோடி), உத்தராகண்ட் (ரூ.5,310 கோடி), கோவா (ரூ.2,399 கோடி) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பற்றாக்குறை மாநிலங்களில் இருந்த மத்திய பிரதேசமும் (ரூ.4,091 கோடி) இப்போது உபரி மாநிலங்களில் இடம்பிடித்துள்ளது. மேலும் அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களும் இப்பட்டியலில் உள்ளன. மொத்தம் 16 மாநிலங்களில் 10 மாநிலங்கள் பாஜக ஆட்சியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அதே காலகட்டமான 2022-23-இல் வருவாய் பற்றாக்குறையுடன் உள்ள மாநிலங்கள் 12. அவை: ஆந்திரப் பிரதேசம் (-ரூ.43,488 கோடி), தமிழ்நாடு (-ரூ.36,215 கோடி), ராஜஸ்தான் (-ரூ.31,491 கோடி), மேற்கு வங்கம் (-ரூ.27,295 கோடி), பஞ்சாப் (-ரூ.26,045 கோடி), ஹரியானா (-ரூ.17,212 கோடி), அசாம் (-ரூ.12,072 கோடி), பிஹார் (-ரூ.11,288 கோடி), கேரளா (-ரூ.9,226 கோடி), இமாச்சலப் பிரதேசம் (-ரூ.6,336 கோடி), மகாராஷ்டிரா (-ரூ.1,936 கோடி), மேகாலயா (-ரூ.44 கோடி).

Facebook Comments Box