கரண்டி, பிரஷ்களை சாப்பிட்டு வந்த இளைஞர் – போதை மறுவாழ்வு மையத்தில் நடந்த அதிர்ச்சி மற்றும் பின்னணி
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறும் இளைஞருக்கு போதுமான அளவு உணவு வழங்கப்படாததால், கோபமடைந்த அவர் கரண்டிகள் மற்றும் பல் துலக்கும் பிரஷ்களை உட்கொண்டு சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள ஹாபூர் என்ற இடத்தில் ஒரு போதை மறுவாழ்வு மையம் உள்ளது. அங்கு 35 வயது சச்சின் என்பவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். நோயாளிகளுக்கு குறைவான உணவு வழங்கப்பட்டதால், சச்சின் கடும் கோபத்தில் இருந்தார். இதனால் அவர் கரண்டிகள் மற்றும் பல் துலக்கும் பிரஷ்களை திருடி, குளியலறைக்குச் சென்று அவற்றை சிறு துண்டுகளாக உடைத்து சாப்பிட்டார். பின்னர் தண்ணீரை அருந்தி நிலைமை மேனேஜ் செய்தார்.
சச்சின் கூறுகையில், “எங்களுக்கு மிகக் குறைவான அளவில்தான் காய்கறிகள், சப்பாத்திகள் வழங்கப்படுகின்றன. வீட்டிலிருந்து யாராவது வருமாறில், எதாவது வாங்கி தருவார்கள். பெரும்பாலான நேரங்களில் எங்களை கவனிக்கவில்லை. சில சமயங்களில் ஒரு நாளைக்கு ஒரு பிஸ்கட் மட்டுமே கிடைக்கிறது” என்கிறார்.
இதனிடையே, இவ்வாறு நடந்ததால் சச்சினுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின், எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் மூலம் அவரது வயிற்றில் ஸ்பூன்கள், பிரஷ்கள் மற்றும் பேனாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், 29 கரண்டிகள், 19 பல் துலக்கும் பிரஷ்கள் மற்றும் 2 பேனாக்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.