‘அப்பாவி உயிர்கள் பலியானது மனதை சோகத்தில் ஆழ்த்துகிறது’ – கரூர் விபத்துக்கு ராஜ்நாத் சிங் இரங்கல்
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட செய்தியில்,
“தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் நடந்த பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மிகவும் வேதனையானது. குற்றமற்ற பொதுமக்கள் உயிரிழந்தது இதயத்தை நொறுக்கும் சம்பவமாகும். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
31 பேர் பலி: தவெக தலைவர் விஜய்யின் கரூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி செய்துள்ளார்.