இந்தியாவில் கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு முதல் முறையாக 20% எட்டியது
இந்தியாவில் கார்ப்பரேட் தலைமை பதவிகளில் பெண்களின் பங்கு முதன் முறையாக 20 சதவீதம் எட்டியுள்ளது.
இதுகுறித்து நியூயார்க் அடையாள நிறுவனமான அவதார்-செராமவுண்ட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2016-ல் இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் தலைமை பதவிகளில் பெண்கள் 13%-ஆக இருந்தனர். இதன் படிப்படியாக உயர்வு 2024-ஆம் ஆண்டு 19% அளவுக்கு வந்துள்ளது. தற்போது, முதன் முறையாக 20% பங்கிற்கு பெண்கள் சென்றுள்ளார்கள். இது சமூக முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.
உலகளாவிய ரீதியிலும், கார்ப்பரேட் தலைமை பதவிகளில் பெண்களின் பங்கு பெரிதும் அதிகரித்து வருகிறது. 2020-ல் 14%, 2021-ல் 15%, 2022-ல் 17%, 2023-ல் 19%, 2024-ல் 19% ஆக இருந்தது.
சிறந்த நிறுவனங்களில், மொத்த பணியாளர்களின் அடிப்படையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 35.7% ஆக நிலைத்துள்ளது. குறிப்பாக, தொழில்முறை சேவைகள் துறையில் பெண்கள் 44.6% பங்கு பெற்றுள்ளனர். அதன்பின், ஐடிஇஎஸ் துறை 41.7%, மருந்து துறை 25%, எப்எம்சிஜி 23%, உற்பத்தித் துறை 12% ஆகியவற்றில் பெண்களின் பங்கு உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த 125 நிறுவனங்களில், 15% ஐடி சேவை நிறுவனங்கள், 9% உலகளாவிய திறன் மையங்கள், உற்பத்தித் துறை 9%, மருந்துகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தலா 5% இடம் பெற்றுள்ளன.
முதன்மையான சிறந்த 10 நிறுவனங்களில் அக்சென்சர், ஆக்ஸா எக்ஸ்எல் இந்தியா பிசினஸ் சர்வீசஸ், கெய்ர்ன் ஆயில் அண்ட் கேஸ், வேதாந்தா லிமிடெட், ஈஒய், கேபிஎம்ஜி, மாஸ்டர்கார்டு இன்கார்பரேஷன், ஆப்டம் குளோபல் சொல்யூஷன்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், ப்ராக்டர் & கேம்பிள், டெக் மஹிந்திரா, விப்ரோ ஆகியவை அடங்குகின்றன.