2029-ம் ஆண்டுக்குள் மும்பை–அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்ற இலக்கு

குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் மும்பை இடையே நடைபெறும் புல்லட் ரயில் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இதற்கிடையில், சூரத் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் ரயில் நிலையத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பார்வையிட்டார்.

அதன்பின்னர் அவர் தெரிவித்ததாவது: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தில், சூரத் மற்றும் குஜராத்தில் உள்ள பிலிமோரா இடையேயான 50 கி.மீ. பகுதி 2027-ம் ஆண்டில் திறக்கப்படும். மும்பை–அகமதாபாத் முழுத் திட்டமும் 2029-ம் ஆண்டிற்குள் செயல்பாட்டுக்கு வரும்.

இந்த திட்டம் செயல்பாட்டில் வந்த பிறகு, மும்பை–அகமதாபாத் இடையேயான பயணம் சுமார் 2 மணி 7 நிமிடங்களில் முடிவடையும். 2028-ம் ஆண்டுக்குள், தானே–அகமதாபாத் பகுதி முழுவதும் இயக்கம் தொடங்கும் என்று அவர் கூறினார்.

Facebook Comments Box