‘ஐ லவ் முகமது’ சர்ச்சை தேவையில்லை: மவுலானா ஷகாபுதீன் வலியுறுத்தல்

உத்தர பிரதேசம், கான்பூரில் நடைபெற்ற மிலாது நபி ஊர்வலத்தில் ‘ஐ லவ் முகமது’ என்ற பதாகை எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் பரபரப்பும், பின்னர் பரேலியில் வன்முறையும் ஏற்பட்டது.

இதன்பற்றி அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷகாபுதீன் ராஸ்வி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “பரேலியில் தற்போது அமைதி நிலவி உள்ளது. அங்கு எந்த தொந்தரவும் இல்லை. பக்தி வெளிப்பாடு தனிப்பட்ட முறையில் இருக்க வேண்டும்; தெருக்களில் ஊர்வலமாக வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

முகமது நபியின் பெயர் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் மிதிப்பதும், கிழிப்பதும், இழிவுபடுத்தப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும். அன்பை மனதில் வைப்பது முக்கியம். மேலும், மற்ற மத விழாக்கள் நடைபெறும் போது எதிர்ப்பு ஊர்வலம் அல்லது போராட்டம் நடத்த கூடாது” என அவர் வலியுறுத்தினார்.

Facebook Comments Box