4 பேர் உயிரிழப்பு, பாஜக அலுவலகம் சூறை: லடாக் வன்முறை விசாரணைக்கு நீதித்துறை உத்தரவு

செப்டம்பர் 24 அன்று லே நகரில் நடந்த வன்முறை போராட்டத்தில் 4 பேர் உயிரிழந்ததற்கான நீதித்துறை விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

லடாக் மாநில அந்தஸ்தையும் அரசியலமைப்பு சட்டத்தின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலியுறுத்தி பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் நடத்தினார். அவரது போராட்டத்திற்கு ஆதரவாக லடாக்கில் செப்டம்பர் 24 அன்று ‘லே அபெக்ஸ் பாடி’ இளைஞர் அணி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

செப்டம்பர் 24 அன்று லே நகரில் திரண்ட போராட்டக்காரர்கள் லடாக் மலைப்பகுதி மேம்பாட்டு தன்னாட்சி கவுன்சில் அலுவலகம் மற்றும் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் போலீசாருக்கு கற்கள் வீசினர், சிஆர்பிஎப் வாகனங்களை தீ வைத்து எரித்தனர். போலீசார் தடியடி நடவடிக்கை எடுத்தும், கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும் வன்முறையாளர்களை விரட்டினர். இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நிர்வாகம் இந்த சம்பவத்தை விசாரிக்க நுப்ரா துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் ஐஏஎஸ் அதிகாரி முகுல் பெனிவால் தலைமையில் விசாரணை நடத்தும் என்று தெரிவித்துள்ளது. விசாரணை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்படும் என்றும், அறிக்கை நான்கு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும். சம்பவ தொடர்பான தகவல் உள்ளவர்கள் அக்டோபர் 4 முதல் 18 வரை தன்னிச்சையாக விசாரணை அதிகாரியிடம் அறிக்கை அல்லது ஆதாரங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, செப்டம்பர் 24, 2025 அன்று லே நகரில் நடந்த வன்முறை போராட்டத்தில் போலீஸ் நடவடிக்கையில் உயிரிழந்த நான்கு பேரின் மரணத்தை சமூக அமைப்புகள், லே அபெக்ஸ் பாடி மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி கோரியதைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box