சபரிமலை கோயிலில் தங்கத் தகடுகள் மாயமான விவகாரம்: விஜய் மல்லையா வழங்கிய தங்கத்தில் செம்பு கலப்பு என தகவல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 1999-ம் ஆண்டு சில துவாரபாலகர் சிலைகள் மற்றும் பீடத்துடன் கூடிய பகுதிகளில் தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டன. இதற்கு முன்னாள் தொழிலதிபர் விஜய் மல்லையா நன்கொடையாக வழங்கிய 30 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது.
இந்த பணியை பெங்களூரு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் மேற்கொண்டார். பணிப் பூர்த்தி செய்யப்பட்டபின், அந்த தகடுகள் சென்னையில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டுக்கு கொண்டு சென்று பூஜை செய்யப்பட்டு, பின்னர் கோயிலுக்குத் தகடுகள் அனுப்பப்பட்டன.
அதன்படி, மொத்த 42.8 கிலோ தகடுகளில் 4 கிலோ தங்கம் மாயமடைந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. உன்னிகிருஷ்ணன் கூறும்போது, “தகடுகள் பராமரிப்புக்காக கொடுக்கப்பட்ட ஆவணத்தில் செம்பால் கலந்த தகடுகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஒருவேளை தங்க முலாம் தேய்ந்து செம்பு போல் தெரிந்திருக்கலாம். அதனால் திருவாங்கூர் தேவசம் தங்க முலாம் பூச முடிவு செய்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜெயராம் கூறியதாவது, “தகடுகள் ‘எலெக்ட்ரோ பிளேட்டிங்’ பணிக்காக உன்னிகிருஷ்ணன் என்னிடம் வழங்கியதாக கூறினார். கோயிலுக்கு அனுப்பும் முன், நான் நண்பர்களுடன் பார்வை பார்த்து, சிறிது நேரம் என் வீட்டில் பூஜை செய்யக் கேட்டேன். அவர் ஒப்புக் கொண்டார். பின்னர் உடனடியாக கோயிலுக்கும் அனுப்பப்பட்டது. இதற்காக நான் எதுவும் பணம் வழங்கவில்லை” என தெரிவித்துள்ளார்.