இருமல் சிரப் காரணமாக 10 குழந்தைகள் உயிரிழப்பு: ம.பி. மருத்துவர் கைது

மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் சாப்பிட்ட 10 குழந்தைகள் உயிரிழந்ததாக புகாரின் பின்னர், அந்த மருந்தை பரிந்துரைத்த சிந்த்வாரா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிஎன்எஸ் சட்டப் பிரிவு 105, 276 மற்றும் மருந்துகள் மற்றும் காஸ்மெடிக்ஸ் சட்டம் பிரிவு 27 இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, ம.பி.-வில் 9, மகாராஷ்டிராவில் 2 மற்றும் ராஜஸ்தானில் 1 குழந்தை, மொத்தம் 12 குழந்தைகள் இருமல் சிரப் உட்கொண்டு உயிரிழந்தது குற்றச்சாட்டாக உயர்ந்தது. இந்த சிரப் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் ஸ்ரேசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிந்த்வாரா மற்றும் சுற்றிய பகுதிகளில் குழந்தைகளின் இறப்புக்கான காரணத்தை கண்டறிவதற்காக, நீதிமன்ற, தேசிய வைராலஜி நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சுற்றுச்சூழல் ஆய்வு அமைப்பு மற்றும் நாக்பூர் எய்ம்ஸ் உள்ளிட்ட நிபுணர்களின் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசு சார்பில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்:

“காஞ்சிபுரம் தயாரிப்பான கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம். காலாவதியான மருந்தோடு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. விசாரணை முடிந்ததும் விரிவான தகவல் அறிவிக்கப்படும்.”

Facebook Comments Box