வெள்ளப் பெருக்கில் இந்தியாவின் உதவிக்கு பூடான் நன்றி

பூடானில் கனமழை காரணமாக அமோசு ஆற்றில் நேற்று அதிகாலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றங்கரையில் தங்கியிருந்த சிலரை உள்ளூர் மீட்பு குழுவினர் உடனடியாக மீட்டனர். ஆனால் ஆற்றின் கரையிலிருந்து வெகு தூரத்தில் சிக்கிய நான்கு ஊழியர்களை உடன் மீட்ட முடியவில்லை. ஆரம்ப தகவலின் படி இருவர் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக பூடான் அரசு ஹெலிகாப்டர்கள் அனுப்ப முடியவில்லை.

இதையடுத்து பூடான் ராணுவம் இந்திய ராணுவத்துடன் தொடர்பு கொண்டு உதவி கோரியது. இந்திய ராணுவம் 2 ஹெலிகாப்டர்களில் உடனடியாக சென்று வெள்ளத்தில் சிக்கிய இரு ஊழியர்களை மீட்டது. பின்னர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இருவரையும் பூடான் ஹெலிகாப்டர் மீட்டது.

சரியான நேரத்தில் ஹெலிகாப்டர்கள் அனுப்பி உதவி செய்த இந்திய ராணுவத்தினருக்கு ராயல் பூடான் அரசு நன்றி தெரிவித்துள்ளது.

Facebook Comments Box