விவாகரத்து பெற்ற கணவன் பாலாபிஷேக கொண்டாட்டம்
மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதை பாலாபிஷேக செய்து கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி நகர் வசிப்பவர் பிராடர் டி.கே., மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு செய்திருந்தார். அண்மையில் நீதிமன்றத்திலிருந்து அவருக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டுக்கு வந்த பிராடர் டி.கே. தாயின் உதவியுடன் பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டம் செய்தார்.
பிராடர் டி.கே. தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “விவாகரத்து கிடைத்துவிட்டது. நான் இப்போது தனியாக இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். மகிழ்ச்சியான விவாகரத்து. 120 கிராம் தங்கம், 18 லட்சம் ரொக்கம் கொடுக்கவோ அல்லது வாங்கவோ இல்லை. இப்போது சுதந்திரமாக இருக்கிறேன். எனது உலகம். எனது விதிகள். தனியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 25-ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதுவரை அந்த வீடியோக்கு 62 ஆயிரம் லைக்குகள், 4 ஆயிரம் கருத்துகள் மற்றும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பதிவாகியுள்ளனர்.