பட்டாசு வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு

ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டம், ராயவரம் பகுதியில் உள்ள கணபதி மைதானத்தில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகளைப் பார்சல் செய்வது தொடர்பான பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதன்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 6 தொழிலாளர்கள் தீக்காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 4 பேரின் உடல்நிலை மோசமாக இருந்தது.

அவர்களில் 2 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

Facebook Comments Box