தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் பெண்கள் வேலை செய்ய விரும்புகின்றனர்
சர்வதேச கல்வி மற்றும் திறன் ஆய்வு அமைப்பு ‘வீபாக்ஸ்’ நிறுவனம் ‘இந்தியா ஸ்கில்ஸ் ரிப்போர்ட் – 2025’ வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் பெண்களின் வேலைவாய்ப்பு கடந்த 7 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் 2019-ல் நடத்தப்பட்ட வேலை தேர்வில், 45.6% பெண்கள் வேலைக்கு தகுதியானவர்களாக இருந்தனர். ஆனால் நடப்பாண்டில் இது 47.53% ஆக உயர்ந்துள்ளது. இது வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் மற்றும் சவால்களை எதிர்கொள்ள பெண்கள் தயாராக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், பெண்கள் வேலை செய்ய விரும்பும் மாநிலங்களிலும் தெளிவாக கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் 10 முக்கிய மாநிலங்களை தேர்வு செய்துள்ளனர். அவை:
- ஆந்திரா, கேரளா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா.
இந்த மாநிலங்களில் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களும், பெண்கள் வேலை செய்ய விருப்பத்தை அதிகரிக்கும் காரணமாக உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.