sniper rifle ரக துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்தியா எடுத்துள்ளது. sniper rifle ரக துப்பாக்கிகளுடன், சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெடிமருந்துகளை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளது. அது பற்றிய செய்தி தொகுப்பு.
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் பல துறைகளில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2023-24ல் சுமார் ரூ.1.27 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்து வந்தது. இந்தியா இப்போது சிறிய ஆயுதங்கள் முதல் பீரங்கிகள், துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள் வரை ஏராளமான ராணுவ உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. ராணுவ தளவாடங்களையும் ஏற்றுமதி செய்கிறது.
இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்த SSS DEFENSE என்ற நிறுவனம் .338 Lapua Magnum sniper rifle ரக துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. மேலும் பல நாடுகளுடன் வெடிமருந்து ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக இது பார்க்கப்படுகிறது.
பெங்களூரை தளமாகக் கொண்ட SSS DEFENSE என்பது இந்தியாவை ஒரு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக நிலைநிறுத்த ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, சர்வதேச அளவில் ஆயுத ஏற்றுமதியில் இந்தியாவை முன்னோடியாக மாற்றும் நோக்கத்தில் இது தொடங்கப்பட்டதாகக் கூறிய அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சதீஷ், 1,500 மீட்டர் இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் sniper rifle ரக துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்வதாகக் கூறினார். அதைத் தாண்டியது இந்தியாவின் மிகப்பெரிய சாதனை.
ஸ்னைப்பர் துப்பாக்கிகள் நவீன போரின் முக்கிய அம்சமாக கருதப்படுகின்றன. sniper rifle ரக துப்பாக்கி துல்லியமாக குறிவைக்கும் திறன் காரணமாக இராணுவ வீரர்களால் விரும்பப்படுகிறது. இந்த sniper rifle ரக துப்பாக்கிகள் இந்திய ராணுவத்தின் ஆயுதக் கிடங்கில் முக்கிய பங்கு வகிக்கின்றன
30க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த .338 லாபுவா மேக்னம் ஸ்னைப்பர் துப்பாக்கியைப் பயன்படுத்துகின்றன. எனவே, இந்த வகை துப்பாக்கிகளுக்கான தேவை அதிகமாக உள்ளது. இனிமேல் இந்த வகை துப்பாக்கிகள் ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ரஷ்யா – உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில், பல நாடுகளுக்கு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அதனால் இந்தியாவின் ராணுவ ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
SSS DEFENSE உருவாக்கிய இந்த துப்பாக்கி சுடும் துப்பாக்கிகள் இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு உதவியது மட்டுமல்லாமல் ஆயுத ஏற்றுமதிக்கான தளத்தையும் உருவாக்கியுள்ளன.
மேலும் சர்வதேச ராணுவப் பாதுகாப்புத் துறையில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
Discussion about this post